Saturday, December 29, 2012

Masala Idly
தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
புளித்த தயிர் - 1 கப்
சீஸ் - 1 கப்
ரொட்டித்தூள் - 1/2 கப்
சக்கரை - 1 தேக்கரண்டி
பட்டாணி - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1
காலி ப்ளவர் - 1/2 கப்
பால் - 1/2 கப்
மிளகு - தேவையான அளவு
வெங்காயம் - 1
வெண்ணெய் - 1 மேஜைகரண்டி
நெய் - 1 மேஜைகரண்டி

செய்முறை:

தயிர், சக்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும். பின்னர் அதில் ரவை தூவி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும். வானலியில் நெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கலவையில் சேர்த்து சமையல் சோடா கலந்து ஊரவைகவும். பால், சீஸ் துருவல், ரொட்டித்தூள், மிளகு, உப்பு ஆகியவற்றை ஓர் அகலமான பாத்திரத்தில் கொட்டிக் கொதிக்க வைக்கவும். விடாமல் கிளறியபடி இருக்க வேண்டும். வானலியில் வெண்ணை சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், காலி ப்ளவர், வேக வைத்த பட்டாணி, தோலுரித்த நறுக்கிய தக்காளி ஆகியவற்றை நன்கு வதக்கி அடுபிலிருகும் கலவையை சேர்த்து இறக்கவும். இட்லி தட்டில் முதலில் ஒரு மேஜைகரண்டி ரவை கலவையை விட்டு பரப்பவும். அதன் மேல் ஒரு மேஜைகரண்டி காய்கறி கலவையை பரப்பவும். மீண்டும் ஒரு மேஜைகரண்டி ரவை கலவையை காய்கறி கலவை மேல் பரப்பவும். இதேபோல் எல்லா இட்லிகளையும் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
மசாலா இட்லிக்கு தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

மசாலா இட்லி தயார்.

Wednesday, December 19, 2012

Papali thokku

தேவையான பொருட்கள்

பப்பாளிக்காய்த் துருவல் - 2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 4
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலை தாளித்துப் பப்பாளித் துருவல், மஞ்சள், உப்பு, ஆகியவற்றுடன் 1/4 கப் தண்ணீர் விட்டு வதக்கவும், சிறு தீயில் பத்து நிமிடம் கிளறி, அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்கி இறக்கவும்.

பப்பாளித் தொக்கு ரெடி.

Wednesday, December 12, 2012

Cabbage chutney

தேவையான பொருட்கள்
கோஸ் - 1/4 கிராம்
Cabbage - 1/4 gram

எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
Oil - 4 tablespoon

வெந்தயம் - 2 மேஜைக்கரண்டி
Fenugreek - 2 tablespoon

கடுகு - 1 மேஜைக்கரண்டி
Mustard - 1 tablespoon

புளிகரைசல் - 1/2 கப்
Tamarind Juice - 1/2 cup

பெரிய வெங்காயம் - 2
Onion - 2

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
Asafoetida - 1/4 spoon

மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
Turmeric - 1/2 spoon

பூண்டு - 3 பற்கள்
Garlic - 3 nos

கொத்தமல்லி - சிறிதளவு
Coriander leaves

உப்பு - தேவையான அளவு
Salt - for taste

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கோஸை பொடியாக நறுக்கி வதக்கி எடுக்கவும். அடுத்து மீண்டும் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். பின்னர் கோஸ், புளித் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி மேலே கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.

கோஸ் சட்னி தயார்.

Method:
Put the pan in stove with oil when heated add the chopped cabbage to be fried. Another heat the pan with oil again to fried the chopped onion, mustard, asafoetida, fenugreek, garlic and grind these. Then mix the cabbage, tamarind juice with the grinned ingredients. Spouce the corriander leaves to serve.

Tuesday, December 11, 2012


Snake Gourd Chutney

தேவையான பொருட்கள்

புடலங்காய் - 1 கப்
Snake Gourd - 1 cup

தேங்காய் துருவல் - 1 கப்
Coconut milling - 1 cup

காய்ந்த மிளகாய் - 8
Dry chilli - 8 nos

புளி - 1 எலுமிச்சை அளவு
Tamarind - 50 gram

உளுத்தம்பருப்பு - 1/2 மேஜைகரண்டி
Black gram - 1/2 table spoon

பெருங்காயம் - சிறிதளவு
Asafoetida - a pinch

எண்ணெய் - 3 தேக்கரண்டி
Oil - 3 teaspoon

உப்பு - தேவையான அளவு
Salt - for taste

செய்முறை:
புடலங்காயை தோல் சீவி விதைகளை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பச்சை வாசனை போன பிறகு தேங்காய் துருவலைச் சேர்த்து மேலும் மூன்று நிமிடங்கள் வதக்கி இறக்கவும். நன்கு ஆறிய பின்னர் எல்லாப் பொருள்களையும் ஒன்றாக சேர்த்து புளி, உப்பு கலந்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

புடலங்காய் சட்னி தயார்.

Method:
Remove the skin and seeds in snake gourd then cut it to pieces.
Put the pan in stove with the oil, when the pan is heated then put dry red chillies, black gram, asafoetida. Fry these ingredients in brown color. In the same pan add the snake gourd to boiled after the smell its gone then add coconut scent and cook for three minutes. All the materials put together well after it cold, Grind with salt and tamarind, solid take part.

Chutney is ready to serve.

Monday, December 10, 2012


Pumpkin Sauce
தேவையான பொருட்கள்

மஞ்சள் பூசணி - 250 கிராம்
Pumpkin - 250 grams

சக்கரை - 1/4 கப்
Sugar - 1/4 cup

புளி - 1 எலுமிச்சை அளவு (சாரு எடுத்து கொள்ளவும்)
Tamarind juice - 1cup

கடுகு - சிறிதளவு
Mustard - 1 teaspoon

காய்ந்த மிளகாய் - 2
Dry red chilli - 2 nos

எண்ணெய் - 1 தேக்கரண்டி
Cooking oil - 1 tablespoon

செய்முறை:

மஞ்சள் பூசணிக்காயை தோல் சீவித் துண்டுகளாக்கிக் கொள்ளவும். வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்துப் பூசணிக்காய், ஒரு சிட்டிகை உப்பு தூள், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பூசணிக்காய் நன்கு வெந்த பிறகு புளிக்கரைசல் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி நன்கு மசித்து கொள்ளவும். கலவை ஜாம் பதத்திற்கு இருக்கட்டும்.

பூசணிக்காய் சட்னி ரெடி...

Method:

Keep up the pieces of yellow pumpkin skin. Put the pan in stove then pour the oil then add mustrad, dry chillies to fry and add pumpkin, a pinch of salt powder, sugar and grind along. When the pumpkin is well-cooked, then add the tamarind juice. It must be jam mixture.

Saturday, December 8, 2012

Cucumber and capsicum pickle
தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் - 500 கிராம்
Cucumber - 500 grams

குடமிளகாய் - 250 கிராம்
Capsicum anum - 250 gram

சக்கரை - 4 மேஜைகரண்டி
Sugar - 4 tablespoon

கடுகு - 1/2 தேக்கரண்டி
Mustard - 1/2 teaspoon

மிளகாய்த்தூள் - 1 1/4 தேக்கரண்டி
Chilli powder - 1,1/4 teaspoon

மிளகு - 15
Pepper - 15 nos

பட்டை - சிறிய துண்டு
Cinnamon - a piece

வினிகர் - சிறிதளவு
Vinegar - 1 table spoon*

உப்பு - தேவையான அளவு
Salt - for your taste

செய்முறை:

 குட மிளகாயை விதைகளை எடுத்துவிட்டு, நீள வாக்கில் மெல்லிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெள்ளரிக்காயை 1/2 செ. மீ. கனமுள்ள வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும். வினிகரைக் கடுகோடு சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு சூடானவுடன் குடமிளகாய் மற்றும் வெள்ளரிக்கயைச் சேர்த்து சிறு தீயில் 2 நிமிடம் வதக்கி இறக்கவும். வினிகரிலிருந்து காய்களை எடுத்து விட்டு, அதே வினிகரில் மீதியுள்ள சரக்குகளை சேர்த்து கொதிக்க விட்டு காய்கள் மீது ஊற்றவும். பிறகு சுத்தமான பாட்டில்களில் வைத்து கொள்ளுங்கள்.

ஊறுகாய் ரெடி....

Method:

Capsicum anum seeds removed, cut it to length by thin, Cucumber it should be 1/2 cm circles can be heavily cut. Put the pan with vinegar on the stove along with mustard, cucumber and capsicum anum along well with hot in small fire and cook for 2 minutes. Remove the pieces from the vinegar, the vinegar to boil add the rest of the cargo then add to the pieces. Then keep it in clean bottles.
How to make snow tea
தேவையான பொருட்கள்


ஓமம் - 1 தேக்கரண்டி
Basil - 1 spoon

வெல்லம் - 6 தேக்கரண்டி
Jagery powder - 6 teaspoon

சீரகம் - 1/2 தேக்கரண்டி
Cumin seed - 1/2 spoon

தனியா - 1 1/2 தேக்கரண்டி
Coriander - 1 1/2 spoon

தண்ணீர் - 4 கப்
Water - 4 cups

பால் - 2 கப்
Milk - 2 cups

ஏலக்காய் - 4 பொடித்தது
Cardamom - 4 nos powder

செய்முறை:

ஓமம், சீரகம் மற்றும் தனியாவை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவிட்டுப் பொடித்த பொடியுடன் வெல்லம் சேர்த்து சிறு தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். தேநீர் வடிகட்டியால் வடிகட்டிப் பால் சேர்த்து ஏலக்காய் தூவி அருந்தவும்.

 சுவையான டீ ரெடி ...

Method:

Basil, cumin and coriander to be fried in dry pan then make it powder. Boil water with these powder, jagery and boil for five minutes. Filter the boiled water, then add milk and pinch cardamom powder. Snow tea is ready to drink.