Tuesday, December 17, 2013

Karunai kilangu Masiyal - Indian dish
தேவையான பொருட்கள்

பிடி கருணைக் கிழங்கு   பெரிதாக‌  4 அல்லது 5, 
பச்சை மிளகாய் 3 
சாம்பார் வெங்காயம்   100 கிராம், 
மிளகாய்த்தூள்  1தேக்கரண்டி, 
மஞ்சள் தூள்  1தேக்கரண்டி 
உப்பு  தேவையான அளவு  
புளி  1 எலுமிச்சை  அளவு

செய்முறை

கருணைக் கிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்துக் கொண்டு நன்றாக‌ மசித்து கொள்ளவும் வெங்காயம்.

பச்சைமிளகாய் இர்ண்டையும் பொடியாக‌ அரிந்து கொள்ளவும்.

புளியை நன்கு கெட்டியாக‌ கரைத்து வடிகட்டி மசித்து வைத்துள்ள‌ கருணைக் கிழங்குடன் சேர்த்து நன்கு கலந்துவைத்துக் கொள்ளவும்.

வணலியை அடுப்பிலேற்றி 1 குழிக் கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து கருணைக் கிழங்கு கலவையை சேர்த்து அத்துடன் உப்பு , மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக‌ கிளறி சுருண்டு வரும் போது இறக்கி விடவும்.

இந்த‌ மசியல் தயிர் சாதத்திற்கு மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிட‌ நன்றாக‌ இருக்கும். மேலும் இந்த‌ பிடி கருணைக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உஷ்ணத்தினால் வரும் வயிற்று வலியை கட்டுப் படுத்தும். மேலும் மூலம் உள்ளவர்கள் பிடி கருணையை வேக‌ வைத்து தோலுரித்து அப்படியே காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் குணமாகி விடும்.