Saturday, January 4, 2014

Thanjavur (Kumbakonam) degree coffee
தேவையான பொருட்கள்:
காபி கொட்டை - தேவையான அளவு
பால் - 1/2 லிட்டர்

செய்முறை:
உங்களுக்கு அந்த நேரத்திற்கு என்ன அளவில் வேண்டுமோ அந்த அளவிற்கு மட்டும் காபி கொட்டையை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை சிக்கரி கலக்காமல் அறைத்து ஃபில்டரில் போடுங்கள். ஒரு பிரமிட் மாதிரி. அமுக்கக்கூடாது. அதன் மேல் ஒரு சிட்டிகை சக்கரை எடுத்து தூவுங்கள்.
இப்போது பில்டரில் கொதிக்கும் தண்ணீரை விடவும். ஒரு தரம் டிகாஷன் இறங்கியதும் அதை மட்டும் எடுக்கவும். (இரண்டாம் முறை, மூன்றாம் முறை எல்லாம் டிகாஷன் செய்யக்கூடாது.) பால் ஒரு அரை லிட்டர் ( தண்ணீர் விடக்கூடாது )எடுத்துக் காய்ச்சவும். இரண்டு முறை பொங்கவிடவும். பொங்கிய பாலை இரு முறை டம்ளர் டவராவில் ஆற்றவும்.
கொதி நிலை சற்று குறைந்த பின், பாலுடன் டிகாஷணைக் கலக்கவும். (டிகாஷனுடன் பாலை அல்ல, பால் இருக்கும் பாத்திரத்தில் டிகாஷனை ஊற்றவேண்டும்) கருமை நிறம் சற்று வரவேண்டும் ஆனால் மிகவும் கறுப்பாக ஆகிவிடக்கூடாது. சக்கரை நீங்கள் வழக்கமாகப் போட்டுக் கொள்ளும் அளவில் பாதி போடவும்.
இன்னொரு தரம் ஆற்றவும். தஞ்சாவூர் (கும்பகோணம்) டிகிரி காபி ரெடி.

Tagged:

0 comments:

Post a Comment