Sunday, January 12, 2014


தேவையானவை:
சுமாராக புளித்த மோர் – 500 மில்லி
வெண்டைக்காய் – 10
கடலைப்பருப்பு
வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்
தனியா – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
அரிசி – ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கப்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – அரை டீஸ்பூன்.

செய்முறை:
கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து… தேங்காய் துருவல், அரிசி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அந்த விழுதை ஒரு பாத்திரத்தில் மோருடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். வெண்டைக்காய்களை துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கி, கலந்து வைத்து இருக்கும் மோருடன் சேர்க்கவும். இதை மிதமான தீயில் சுட வைத்து லேசாக கொதித்ததும் இறக்கவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்க்கவும்.
சுவையான மோர்க்குழம்பு  தயார்.

Tagged:

0 comments:

Post a Comment