Wednesday, January 8, 2014


Fruit curd Rice

தேவையானப் பொருள்கள்:

அரிசி சாதம் – அரை கப்,
தயிர் – 2 கப்,
பச்சை மிளகாய் – 1,
கேரட்- 1,
மாங்காய் – 1,
மாதுளை – கால் கப்,
திராட்சை – 20,
ஆப்பிள் – 1,
கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக் கொண்டு, ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கேரட் மற்றும் மாங்காயை துருவிக் கொள்ள வேண்டும். தயிருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை வேக வைத்த அரிசி சாதத்துடன் கலந்து வைக்க வேண்டும். பின்பு அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் நறுக்கிய பழ வகைகள் சேர்த்து நன்கு கிண்ட வேண்டும். இப்போது சூடான பழ தயிர் சாதம் தயார்.

Tagged:

0 comments:

Post a Comment